ஜோகூர் பாரு: சிட்டி சென்டர் அருகே சீனப் புத்தாண்டின் போது உரிமம் இல்லாமல் பட்டாசு வெடித்து விளையாடிய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 22) அதிகாலை 1 மணி முதல் 3.10 மணி வரை மூன்று வெவ்வேறு இடங்களில் அனைவரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு தெற்கு OCPD உதவி ஆணையர் ரவுப் செலமட் தெரிவித்தார்.
49 ஷாட்கள் கொண்ட எட்டு யூனிட் பட்டாசுகள், 168 ஷாட்கள் கொண்ட 6 யூனிட் பட்டாசுகள், ஐந்து யூனிட் ‘ஹேப்பி பூம்’ பட்டாசுகள் மற்றும் 25 ஷாட்கள் கொண்ட ஒரு யூனிட் பட்டாசுகளையும் பறிமுதல் செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் இங்கே ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிறு குற்றச் சட்டம் 1955ன் பிரிவு 3(5)ன் கீழ் பட்டாசு வெடித்து விளையாடியதற்காக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு மாதத்திற்கு மேல் சிறை தண்டனை அல்லது RM100 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.