இன மற்றும் கலாச்சார வேறுபாடுகள் மலேசியர்களிடையே பிளவை ஏற்படுத்தக் கூடாது, மாறாக மக்களை ஒன்றிணைப்பதில் அவை முக்கிய பங்காற்ற வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
“மலேசியாவில் பல இனங்கள், மாதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் உள்ளன என்பதை எமது சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
“ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ், நாங்கள் அனைத்து இனங்கள் மற்றும் அவர்களை கலாச்சாரங்களும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறோம், ஏனெனில் இந்தச் சூழ்நிலையில்தான் ஒற்றுமையான மலேசிய தேசத்தின் பன்முகத்தன்மையை நாம் உருவாக்க வேண்டும். அத்தோடு ஒவ்வொரு இனங்களின் கலாச்சார புரிதல் மூலம் ஒற்றுமை உணர்வு உருவாக்கப்பட வேண்டும்,” என்று அவர் இன்று ஊத்தான் மெலிந்தாங்கில் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றும்போது கூறினார்.