நேற்று நண்பகல் 12.25 மணியளவில், காலியாக இருந்த சமையல் எரிவாயுக் கலன்களை ஏற்றிக் கொண்டு மலாக்காவிற்குச் சென்ற டிரெய்லர், சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமார் 525 சமையல் எரிவாயுக் கலன்கள் சாலையில் சிதறியதாக ஜெம்போல் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹூ சாங் ஹூக் கூறினார்.
இதனால் குறித்த சாலை துப்புரவு பணிக்காக பாதை மூன்று மணி நேரம் மூடப்பட்டதாக அவர் கூறினார்.
“45 வயதான டிரெய்லர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர், சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்ததால் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
குறித்த சம்பவத்தின் விளைவாக டிரெய்லர் ஓட்டுநர் அவரது இருக்கையில் சிக்கிக்கொண்டார், இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களால் பிற்பகல் 3.40 மணியளவில் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் டிரெய்லர் ஓட்டுநரின் கால் மற்றும் வலது கை உடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்கு (HTAN) அனுப்பப்பட்டதாகவும் ஹூ கூறினார்.