பினாங் மாநிலத்தில் மேலும் மூன்று பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் இதுவரை மொத்தம் 21 பன்றிப் பண்ணைகளில் பன்றிக்காய்ச்சல் பரவி இருப்பது உறுதிச் செய்யப்பட்டிருப்பதாக, மாநில முதலமைச்சர் சௌவ் கொன் இயோ தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை வரையில் செபராங் பிறை உத்தாரா, செபராங் பிறை தெங்கா மற்றும் செபராங் பிறை செலாத்தான் ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் பன்றிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அங்குள்ள பன்றிப் பண்ணைகளில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், பண்ணைகளில் அந்நோய்ப் பரவாமல் இருக்கத் தேவையான சுகாதர பாதுகாப்பையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இக்காலகட்டத்தில், நான்கு பன்றிப் பண்ணைகளில் இருந்த 4,204 பன்றிகள் அழிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.