கைரி ஜமாலுதீனின் அம்னோ உறுப்பினர் நிலை குறித்து இன்று தெரிய வரும்

கோலாலம்பூர்: கைரி ஜமாலுதீனின் அம்னோ உறுப்பினர் நிலை குறித்து இன்று மாலை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை (ஜன 25) சுங்கை பீசியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் Satu Anggota, Satu Rumah” (Sasar) திட்டத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதிப்படுத்தினார். இந்த விஷயத்தில் கருத்து கேட்டபோது  (இன்று மாலை)   என்று அவர் சுருக்கமாக கூறினார்.

முன்னதாக, 15ஆவது பொதுத் தேர்தலின் போது (GE15) சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற முடிந்தால், கட்சியைச் சுத்தம் செய்வதே தனது நோக்கத்தை கைரி வெளிப்படையாகக் கூறியிருந்தார். அம்னோ மீண்டும் ஒருமுறை பெருமைப்படக் கூடிய கட்சியாக மாற வேண்டும் என்பதை அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் அம்னோ பொதுச் சபையில் ஒப்புதல் பெறுவதற்காக, வரவிருக்கும் கட்சித் தேர்தலில் முதல் இரண்டு பதவிகளுக்கான போட்டி இல்லா தீர்மானத்தை “bulldoze” செய்ய சில பிரதிநிதிகளால் சதி இருப்பதாக முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் முன்பு குற்றம் சாட்டியிருந்தார். இன்று மாலை மெனாரா டத்தோ ஒன்னில் அம்னோ கூட்டம் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here