வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட Ayahanda Harimau Kumbang சட்டவிரோத அமைப்பை சேர்ந்த 21 பேர் கைது

வன்முறை செயல்கள் மற்றும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் Ayahanda Harimau Kumbang (AHK) என்ற சட்டவிரோத அமைப்பை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 21 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் டுங்கூனில் Op Selendang என்ற குறியீட்டுப் பெயருடன் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, குறித்த 21 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடதாக மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ ரோஹைமி முகமட் இசா கூறினார்.

“கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இரு போலீஸ் அதிகாரிகள் மற்றும் 12 பேர் மற்ற தரவரிசைகளை சேர்ந்த மொத்தம் 14 போலீஸ்காரர்களும் அடங்குவர்” என்று, நேற்று திரெங்கானு காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மேலும் “இவர்கள் வட்டி முதலைகளின் (சட்டவிரோத பணம் கொடுப்பவர்கள்) மற்றும் சட்டவிரோத கார் இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்கு கடன் சேகரிப்பாளர் முகவர்களாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த AHK சட்டவிரோத அமைப்பு டுங்கூனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200 முதல் 300 வரையிலான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் அதன் உறுப்பினர்களிடமிருந்து அங்கத்துவ பணம் வசூலிப்பதும் கண்டறியப்பட்டது, இவ்வாறு பணம் வசூலிப்பதால் அவர்கள் ஏதேனும் குற்றம் அல்லது குற்றத்தைச் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது பார்த்துக் கொள்ளப்படும் என்று ரோஹைமி கூறினார்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் நேரடியாக குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை – ஆனால் சட்டவிரோத அமைப்பில் உறுப்பினராக இருப்பது ஒரு குற்றமாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 10 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், இருவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவர் புக்கிட் அமானில் உள்ள கூட்டரசு போலீஸ் தலைமையகத்தின் அடுத்த நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் அனைவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத அமைப்பில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

“39 வயதான அமைப்பின் தலைவர் உட்பட மேலும் ஏழு சந்தேக நபர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here