துணைப்பிரதமர் தனது கடப்பிதழை நிரந்தரமாக திருப்பி தருமாறு விண்ணப்பத்துள்ளார்

பெட்டாலிங் ஜெயா: துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, தனது உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்காக தனது கடப்பிதழை நிரந்தரமாக திருப்பித் தருமாறு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அவரது ஊழல் வழக்கு விசாரணையின் முடிவு நிலுவையில் உள்ள ஜாஹிட்டின் நிபந்தனை ஜாமீனின் ஒரு பகுதியாக உயர் நீதிமன்றம் தற்போது அவரது கடப்பிதழை நிறுத்தி வைத்துள்ளது.

ஜாஹிட், முந்தைய பாரிசான் நேஷனல் நிர்வாகத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது, ​​யயாசன் அகல்புடியிடம் இருந்து மில்லியன் கணக்கான ரிங்கிட் மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக லஞ்சம் வாங்கியதில் பணமோசடி மற்றும் கிரிமினல் நம்பிக்கை மீறல் ஆகிய 47 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

பெர்னாமா அறிக்கையின்படி, ஜாஹிட் ஒரு வாக்குமூலத்தில், உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்கள் உட்பட தனது கடமைகளை திறம்பட நிறைவேற்ற தனது பாஸ்போர்ட் தேவை என்று கூறினார்.

துணைப் பிரதமராக, உத்தியோகபூர்வ விஷயங்களுக்காக (வெளிநாட்டில்) அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் இருந்து எனக்கு ஆணை உள்ளது. ஜாஹிட், தனக்கு ஓடிப்போகும் எண்ணம் இல்லை என்றும், நீதிமன்றம் நிர்ணயித்த தேதிகளில் விசாரணைக்கு வருவேன் என்றும் உறுதியளித்தார்.

தனது வாக்குமூலத்தில், கிராமப்புற மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சராகவும் இருக்கும் ஜாஹிட், தனது கடப்பிதழ் இல்லாததால் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டதாகக் கூறினார்.

தனது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக குடிநுழைவு அலுவலகத்தில் இருந்து  தூதரக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தனது கடவுச்சீட்டு தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். கடவுச்சீட்டு திரும்பப் பெற்றவுடன், நீதிமன்றத்தின் மூலம் தனது கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்க இனி விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றார்.

எனவே, ஜாமீன் பெறுவதற்கான நிபந்தனைகளின் ஒரு பகுதியாக தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் உத்தரவை ரத்து செய்ய அவர் விண்ணப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here