பதவி நீக்கம் செய்யப்பட்ட அம்னோ தலைவர்கள் பக்காத்தானில் சேருவதற்கு இதுவரை எந்த அழைப்பும் விடுக்கவில்லை – அன்வார்

அம்னோவிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள் பக்காத்தான் ஹராப்பானில் சேர இதுவரை எந்த அழைப்பும் விடுக்கவில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவ்வாறு அழைப்பு ஏதேனும் இருந்தால், அவர்கள் அதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும், அத்தோடு மற்ற தலைவர்களின் கருத்துக்களை நாங்கள் பெற வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

அன்வார் நீண்ட காலத்திற்கு முன்பே அம்னோ கட்சியை விட்டு வெளியேறினார் என்றும், இப்போது உள்ள பிரச்சினை அம்னோவின் உட்கட்சி முடிவு என்றும் கூறினார்.

“இந்த ஒற்றுமை அரசாங்கத்தில் நாம் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதால், அனைத்து அம்சங்களையும் பரந்த நோக்கில் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன 29) இங்கு மேரு ராயாவில் தம்புன் நாடாளுமன்ற சேவை மையத்தைத் தொடங்கி வைத்த பின்னர், நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 27), அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுடின் மற்றும் உச்ச கவுன்சில் உறுப்பினர் டான்ஸ்ரீ நோ ஒமர் ஆகியோரை பதவி நீக்கம் செய்தது. அத்தோடு முன்னாள் அம்னோ துணைத் தலைவரும், செம்ப்ராங் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைனை, ஆறு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here