அடுக்குமாடிக் குடியிருப்பின் 11வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் அதிஷ்டவசமாக உயிர்தப்பினான்

ஜோகூரின், ஜாலான் கருடா என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுவன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தான், ஆனாலும் அவனது இடது கை முறிந்தது என்று, ஜோகூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து இரவு 7.31 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், லார்க்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மூத்த தீயணைப்பு அதிகாரி II, சுல்கர்னைன் அரிஃபின் தலைமையில் 10 பேர் கொண்ட குழு உடனே அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

“அடுக்குமாடிக் கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன், தரை தளத்தில் இருந்த கடையின் கூரையில் சிக்கிக் கொண்டிருந்தான், “தீயணைப்பு வீரர்களை பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்டு, ஆரம்ப சிகிச்சை அளித்த பின்னர், ஜோகூர் பாரு, சுல்தானா அமினா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டான்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here