ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளராக ஃபாமி நியமனம்

ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளராக தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது நியமனத்தை இன்று உறுதிப்படுத்திய ஃபாமி, இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உத்தரவை வழங்கியதாகவும், குறிப்பாக ஊடகங்களைக் கையாளும் போது, தமது அமைச்சும் தானும் அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயற்படுவோம் என்றும் கூறினார்.

ஒவ்வொரு புதன் கிழமையும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நடைபெறும் ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதமரால் கலந்து கொள்ள முடியாவிட்டால் பிரதமருக்கு பதிலாக அம்மாநாடு அவரால் நடத்தப்படும் என்று ஃபாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here