FIFA வின் நிர்வாகக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட டத்தோ ஹமிடினுக்கு பிரதமர் வாழ்த்து

2023 -2017 ஆம் ஆண்டிற்கான உலக காற்பந்து சம்மேளனத்தின் (FIFA) ஐந்து ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவராக, மலேசிய கால்பந்து சங்கத்தின் (FAM) தலைவர், டத்தோ ஹமிடின் முகமட் அமீன் நியமிக்கப்பட்டதற்கு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்”வாழ்த்துக்கள் மற்றும் இந்த நியமனம் தேசிய கால்பந்து துறைக்கு புதிய எழுச்சியை கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று, நேற்றிரவு பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here