வாகாப் கிங், தும்பாட் அருகே 5வது கிலோமீட்டரில் , ஜாலான் பலேக்பாங்-தும்பாட் என்ற இடத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார்.
இரவு 11.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சோங் யோங் ரென், 29, என்பவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இறந்ததாக, கிலாந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர் கம்போங் தெர்பாக்கில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு மின்விளக்கு கம்பங்களில் மோதி, விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தும்பாட் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.