15வது பொதுத்தேர்தலில் பக்காத்தானுக்கு 31 விழுக்காடு மலாய்காரர்களின் ஆதரவு இருந்தது என்கிறார் அன்வார்

நடந்து முடிந்த 15வது பொதுத்தேர்தலில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள மலாய் வாக்காளர்களிடமிருந்து பக்காத்தான் ஹராப்பான் சராசரியாக 31 விழுக்காடு ஆதரவைப் பெற்றுள்ளது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கிளாந்தான் மற்றும் திரெங்கானு போன்ற பாஸ் ஆதிக்கத்திலுள்ள மாநிலங்களில் பக்காத்தான் கூட்டணியினர் அதிகமான செல்வாக்கை பெறாவிட்டாலும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் அவர்கள் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளனர் என்று பக்காத்தான் தலைவருமான அவர் கூறினார்.

சிலாங்கூர், பினாங்கு, கூட்டரசு பிரதேசம் மற்றும் நெகிரி செம்பிலான் போன்ற சில மாநிலங்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பெற்றிருந்தது “ என்று இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 8) Merchant Square உள்ள அதன் தலைமையகத்தில் பிகேஆர் உயர்மட்டத் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here