TVET இன் கீழ் நாடு முழுவதும் 1,295 பயிற்சி மையங்கள் செயற்படுகின்றன- துணை பிரதமர்

தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்கு இடையே TVET திறன் கல்வியை ஒருங்கிணைக்கும் பொருட்டு, அவற்றுக்கான நிரந்தர செயலகம் அமைப்பது குறித்து தேசிய TVET மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, துணை பிரதமர் டாக்டர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதும், 1,295 TVET பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், அவை 6,0006,000க்கும் மேற்பட்ட கற்கைநெறிகளை வழங்குகின்றன.

அத்தோடு சில TVET பயிற்சி மையங்கள் தொழில் முனைவோர் பயிற்சி மையங்களாக மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

TVET பயிற்சி மையங்களுடன் திறன் பகிர்தலை ஏற்படுத்துவதற்கு, செயலகத்தில் தனியார் துறையும் ஈடுபடவிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here