ஜோகூர் மந்திரி பெசார் பிப்ரவரி 12 தொடங்கி மூன்று நாட்கள் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ பயணம்

ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 12) தொடங்கி மூன்று நாட்களுக்கு சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் தூதரக அதிகாரி ஜீவன் சிங்குடனான சந்திப்பின் பின்னர், அவர் தனது முகநூல் பதிவில் இதனை அறிவித்தார்.

இந்த பயணத்தின் போது, சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு (SBF) மற்றும் சிங்கப்பூர் உற்பத்தி கூட்டமைப்பு (SMF) ஆகியவற்றுடன் சந்திப்புகளை நடத்துவதுடன், சிங்கப்பூர் அமைச்சர்கள் பலரையும் சந்திக்க உள்ளதாக ஒன் ஹபீஸ் கூறினார்.

“இந்த பயணத்தின் மூலம், ஜோகூர்-சிங்கப்பூர் நல்லுறவை மேலும் வலுப்படுத்தவும், அனைவரின் நல்வாழ்வுக்காக பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் முனைவேன் ” என்று மச்சாப் சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here