இன்று காலை 8 மணி நிலவரப்படி, பகாங்கில் உள்ள மாரான் மற்றும் ரவூப் ஆகிய இரண்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 41 பேர் இன்னும் இரண்டு அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, பகாங்கின் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
மாரானில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 20 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ரவூப்பில், எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களத்தின் (ஜேபிஎஸ்) இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, பகாங்கில் உள்ள மூன்று ஆறுகள் இன்னும் அபாய அளவைத் தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.