வெடிகுண்டுகள் மற்றும் கூரிய ஆயுதங்களை வைத்திருந்ததற்காக, கால்நடை வளர்ப்புப் பண்ணை தொழிலாளியான பி.எஸ். தமிழ் குமரனுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு சவுக்கடியும் விதித்து மலாக்கா அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டதையடுத்து, 36 வயதான தமிழ் குமரனுக்கு குறித்த தண்டனையை நீதிபதி தர்மாஃபிக்ரி அபு ஆடாம் வழங்கினார்.
குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், சந்தேக நபர் மற்ற இரு நண்பர்களுடன் தோயோத்தா வியோஸ் வகை காரில் இருந்த கைக்குண்டை, சட்ட அனுமதியின்றி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டுக்களை அவர் ஒப்புக்கொண்டதுடன், இவ்வழக்கின் நியாயமான சந்தேககங்களுக்கு இடமின்றி அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
கடந்த 24 அக்டோபர் 2019 அன்று, ஜாசின் மாவட்டத்தில் உள்ள செர்காமில் உள்ள லெபு அலோர் காஜா-மலாக்கா – ஜாசின் (AMJ) போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பில் சுமார் நண்பகல் 12.15 மணியளவில் இந்தக் குற்றம் செய்யப்பட்டது எனக் கூறப்பட்டது.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரே நேரத்தில், அதே இடம் மற்றும் அதே தேதியில், செல்லுபடியாகும் எந்த சட்ட அங்கீகாரமும் இல்லாமல் இரண்டு கத்திகள் வைத்திருந்ததற்காகவும் குற்றவாளி என கண்டறியப்பட்டது.
24 அக்டோபர் 2019 அன்று கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தண்டனையை ஒரே நேரத்தில் செயல்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோ சிறைச்சாலையில் அதை அனுபவிக்க உத்தரவிட்டார், ஏனெனில் அவர் ஷா ஆலாம், சிலாங்கூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்கையும் எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.