முவாத்ஸாம் ஷாவில் உள்ள ஜாலான் பஹாவ்-கெராடோங்கில் காரும் டேங்கர் லோரியும் மோதிய விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இறந்தவர், குவாந்தானை சேர்ந்த 56 வயதான ரோஸ்னா சாடோன் என அடையாளம் காணப்பட்டார் என்றும், விபத்துக்குள்ளான காரில் பயணித்தவர்கள் கணவன், மனைவி மற்றும் அவர்களது பிள்ளை என்பதும் தெரியவந்துள்ளது என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பாகங் மணிலா மக்கள் தொடர்பு அதிகாரி, சுல்ஃபாட்லி சகாரியா கூறினார்.
இந்த மோதல் காரணமாக டேங்கர் லோரியின் முன்பகுதி தீப்பிடித்தது, மற்றும் சம்பந்தப்பட்ட கார் மோசமாக நசுங்கியது என்றும் அவர் கூறினார்.
“விபத்துக்குள்ளான காரில் இருந்து ஒரு வயது வந்த ஆண் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் பொதுமக்களின் உதவியுடன் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்டபெண் தீயணைப்புத் துறையினரால் வெளியே அகற்றப்பட்டார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மீட்புப் பணியில் பங்கேற்ற சுகாதாரப் பணியாளர்களால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாக சுல்ஃபாட்லி கூறினார்.
“காயமடைந்தவர்கள் தொடர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், மேலும் டேங்கர் லோரி ஓட்டுநர் காயமின்றி உயிர் பிழைத்தார் என்றும் அவர் கூறினார்.














