மாநிலத் தேர்தலில் மக்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றுவதை தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு உறுதி செய்யும்

இந்த ஆண்டு ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதன் மூலமாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்ய, தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சகம் (KKD) முயற்சிக்கும் என்று, அதன் துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.

எனவே மாநிலத் தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுடனும் தமது அமைச்சு கலந்துரையாடல்களை நடத்தும் என்றும், இதனால் வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களும் சென்றடைய அரசாங்க நிறுவனம் என்ற ரீதியில் எமது துறை செயற்படுக் என்றார்.

மக்கள் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் அது அவர்களுடைய விருப்பம். ஆனாலும் வாக்களிக்க தகுதியான அனைத்து மலேசியர்களிம் வாக்களிப்பு கடமையை சரியாக செய்வதற்கும், அதிக வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குச் செல்வதை உறுதிசெய்வதற்கும் தமது அமைச்சு துணை நிற்கும் என்று, பணி நிமித்தம் பினாங்கிற்கு சென்றிருக்கும் தியோ கூறினார்.

சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்களில் இவ்வாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here