மலேசிய தெலுங்கு சங்கம் துருக்கி – சிரியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்கியது

இந்தியாவின் என்.ஆர்.ஐ கலாச்சார அமைப்பின் கூட்டமைப்பு மற்றும் மலேசிய தெலுங்கு சங்கத்தின் மகளிர் பிரிவினர் (2022இல்)  பல்வேறு துறைகளில் சமூக  சேவையாற்றியவர்களை கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்களுக்கு மலேசிய தெலுங்கு சங்கம் மகளிர் பிரிவுத் தலைவர் டாக்டர் கெளசல்யா ஜூவல் மற்றும் அவரது குழுவினரும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அண்மையில் நடைபெற்ற  மலேசிய தெலுங்கு சங்கத்தின் 67ஆம் ஆண்டுவிழாவுடன்  இணைந்து இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மலேசிய தெலுங்கு சங்கம் துருக்கி – சிரியா நிலநடுக்கத்தால் பாதிக்கபட்டவர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில்   மலேசிய ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு 10,000 ரிங்கிட்டை வழங்கியது. இந்த நிவாரண நிதிக்கான  காசோலையை லேசிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின் கோம்பாக் தொகுதியின் துணைத் தலைவர்  முத்தப்பன்  பெற்று கொண்டார்.   மலேசிய தெலுங்கு சங்கத்தின் 67 ஆவது  ஆண்டுவிழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

காசோலையை மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் எஸ். வெங்கட பிரதாப் வழங்கினார். மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர்  சத்யா சுதாகரன் மற்றும் மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஆலோசகர் டத்தோ டாக்டர் அட்சய குமார் ராவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

1955 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து மலேசிய தெலுங்கு சங்கம் பல்வேறு சமுதாய திட்டங்களுக்கு பங்களித்து வருகிறது. சமீபத்திய துருக்கி – சிரியா பூகம்பம் 45,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்காக மலேசிய தெலுங்கு சங்கம் அதன் உறுப்பினர்களிடமிருந்து RM10,000 ஐ திரட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here