உணவு வளாகங்களில் புகைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக RM25,600 அபராதம் விதித்தது ஜோகூர் மாநில சுகாதாரத் துறை

ஜோகூர் மாநில சுகாதாரத் துறை நேற்று மேற்கொண்ட நடவடிக்கையில், உணவு வளாகங்களில் புகைபிடித்தல், குறைந்தபட்ச விலைக்குக் குறைவாக சிகரெட்டை விற்றல் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக, புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு விதிமுறைகள் 2004 (PPKHT 2004) இன் கீழ் RM25,600 மதிப்புள்ள அபராதங்கள் விதிக்கப்பட்டதாக. மாநில சுகாதார இயக்குனர், டத்தோ டாக்டர் அமான் ராபு கூறினார்.

இந்த நடவடிக்கையில் மொத்தம் 109 வணிக வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன என்றார்.

மொத்தம் 70 அபராதங்கள் விதிக்கப்பட்டன, அவற்றில் 21 அபராதங்கள் RM5,250 மதிப்புள்ள உணவு வளாகங்களில் புகைபிடித்த குற்றத்தை உள்ளடக்கியவை, மற்றும் RM4,500 மதிப்புள்ள 9 அபராதங்கள் குறைந்தபட்ச விலைக்குக் குறைவான சிகரெட்டை விற்ற அல்லது விற்பனைக்கு வழங்கிய குற்றத்திற்காக விதிக்கப்பட்டன.

மேலும் இந்த நடவடிக்கையில், RM14,573 மதிப்புள்ள பல்வேறு பிராண்டுகளின் மொத்தம் 2,134 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக டாக்டர் அமான் கூறினார்.

“சட்டத்தை அனைத்து தரப்பினரும் கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் நோக்கில் அவ்வப்போது இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு முழுவதும், ஜோகூர் மாநில சுகாதாரத் துறையால் மொத்தம் RM2.28 மில்லியன் மதிப்புள்ள 9,135 அபராதங்கள் விதிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here