கோத்தா பாரு மாவட்டத்தைச் சுற்றியுள்ள வெளிநாட்டு ஓட்டுநர்களின் குற்றங்களை கண்டறியும் சிறப்பு நடவடிக்கையில் (PEWA), வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு எதிராக கிளாந்தான் சாலைப் போக்குவரத்துத் துறை நேற்று 186 அபராதங்கள் விதித்ததுடன் 83 வாகனங்களை மறுமுதல் செய்ததாக, அதன் இயக்குனர் முகமட் மிசுவாரி அப்துல்லா தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 3 லோரிகள், 8 கார்கள், 11 முச்சக்கரவண்டிகள் மற்றும் 69 மோட்டார் சைக்கிள்கள் என்பன அடங்கும் என்றார்.
இந்நடவடிக்கையில் கண்டறியப்பட்ட குற்றங்களில், தகுதியான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை, வீதி வரி இல்லை, வாகன காப்புறுதி இல்லை மற்றும் மோட்டார் வாகன உரிமங்களை தவறாக பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
“இந்த செயல்பாட்டின் போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்களை சமர்ப்பிக்க தவறிய குற்றத்திற்காக ஒரு பாகிஸ்தானியர் மற்றும் ஐந்து ரோஹிங்கியா இனத்தவரைக் கொண்ட ஆறு வெளிநாட்டவர்களை கிளாந்தான் மாநில குடிநுழைவுத் துறை கைது செய்தது.
தனியாருக்குச் சொந்தமான வாகனங்களை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விடவோ அல்லது கடன் கொடுக்கவோ வேண்டாம் என்று போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது, ஏனெனில் இது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரக்கூடிய ஒரு குற்றமாகும் என்று முகமட் மிசுவாரி மேலும் கூறினார்.
“இதற்கிடையில், சரியான உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்டவர்கள் விபத்தில் சிக்கினால், மூன்றாம் நபர் காப்பீடு கோருவதில் சிரமம் ஏற்படும்,” என்றார்.