இரண்டுமாதக் குழந்தை மீது 5 வயது சகோதரன் தவறுதலாக உருண்டதால் அது பரிதாபமாக உயிரிழந்தது

தூங்கிக் கொண்டிருந்த போது, அதன் 5 வயது சகோதரன் கவனக்குறைவாக குழந்தை மீது உருண்டு விழுந்ததால், இரண்டு மாத கைக்குழந்தை இறந்தது.

உயிரிழந்த குழந்தையின் தந்தையான Meor Syazalee Sha @ Meor Sha, 38, கூறுகையில், அலோர் காஜாவின் தாமான் பிடாரா செத்தியாவில் உள்ள தமது வீட்டில், தான் தனது மனைவி மற்றும் மகள் மரியம் சோபியா ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், ஒன்பது, ஆறு மற்றும் ஐந்து வயதுடைய அவர்களது மகன்கள் தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறினார்.

நேற்றுக் காலை குழந்தை மரியம் அசையாததால், சுயநினைவின்றி இருப்பதை அவரது மனைவி உணர்ந்தார் என்றும், அப்போது குழந்தை அருகே தனது ஐந்து வயது மகன் தூங்குவதைக் கண்டார் என்றும் கூறினார்.

“நாங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தை தாம் விதியாக ஏற்றுக்கொண்டதாகவும், யாரும் எதிர்மறையான கருத்துகளையோ அல்லது இந்த வழக்கைப் பற்றி ஊகிக்கவோ மாட்டார்கள் என நம்புவதாகவும் கூறினார்.

அலோர் காஜா மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், அர்ஷத் அபு இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here