ஈப்போ: தைப்பிங்கின் சுங்கை திங்கியில் நான்கு பேர் பயணித்த கார் டிரெய்லருடன் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு தம்பதிகள் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் போது, Ng Swee Ho, 67, Chew Yang Kim, 77 மற்றும் அவர்களது மனைவிகள், Kor Siok Har, 64 மற்றும் Ng Ah Mooi, 63, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தைப்பிங் OCPD உதவி ஆணையர் ரஸ்லாம் அப்துல் ஹமித் தெரிவித்தார்.
இறந்தவர்கள் பந்தாய் ரெமிஸ் மற்றும் சித்தியவான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தைப்பிங் நோக்கிச் சென்றவர்கள் என்றும் அவர் கூறினார். அவர்கள் சென்ற கார், பொருட்களை ஏற்றிச் சென்ற டிரெய்லரின் பாதையில் வளைந்து, வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. காரில் இருந்தவர்கள் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
டிரெய்லரை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் காயமடையவில்லை என்று கூறிய அவர், சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.








