கம்போங் மெகாட் செகாமாவில் உள்ள ஜாலான் ரிவர்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் வெல்டிங் கடை, மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை மற்றும் தளபாடங்கள் விற்கும் கடைகளை உட்படுத்திய மூன்று வளாகங்கள் எரிந்து நாசமானது.
இன்று காலை 11.44 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பான அவசர அழைப்பைப் பெற்ற பிறகு, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், குறித்த தீ விபத்தில் மூன்று நிரந்தர கடைகள் 100 விழுக்காடு எரிந்து நாசமானதை உறுதிசெய்தனர்’ என்று தெமர்லோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயற்பாட்டு பிரிவு அதிகாரி, கமாருல் அரிபின் அப்துல் காமிஸ், இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.









