கெப்போங் மற்றும் செப்பூத்தே நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள மொத்தம் 11 வளாகங்களில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் (DBKL) அமலாக்க அதிகாரிகளால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதற்காக 18 வெளிநாட்டு பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.24) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்களில் எட்டு சீனப் பிரஜைகள், நான்கு தாய்லாந்து நாட்டினர், மூன்று இந்தோனேசியர்கள், இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்கள் மற்றும் ஒருவர் வியட்நாம் நாட்டவர் என்றும் இவர்கள் மசாஜ் மற்றும் பாலியல் தொழில் செய்வதாக சந்தேகிக்கப்படுவதாக, DBKL தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வளாகங்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 101(1)(v), உள்ளாட்சிச் சட்டம் 1976ன் கீழ் உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.