சரவாக்கின் கூச்சிங், பாவ் மற்றும் சிபுரான் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், நேற்று இரவு தமது வீடுகளை விட்டு வெளியேறிய 31 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரின் எண்ணிக்கை, இன்று காலை 65 குடும்பங்களை உள்ளடக்கிய 278 பேராக அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு அங்கு ஆறு வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக சரவாக் பேரிடர் மேலாண்மை குழு செயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையை தொடர்ந்து, கூச்சிங் மற்றும் பாவ் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை கண்காணிக்க சரவாக் பேரிடர் மேலாண்மை குழு தொடர் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.