492 பிலிப்பைன்ஸ் நாட்டினரை நாடு கடத்தியது சபா குடிநுழைவுத் துறை

கடந்த செவ்வாய்கிழமை (பிப் 28) சண்டாக்கான் துறைமுகம் வழியாக சுமார் 492 பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மீண்டும் பிலிப்பைன்ஸுக்கு நாடு கடத்தப்பட்டதாக்க சபா குடிநுழைவுத் துறை இயக்குநர், டத்தோ SH சித்தி சலேஹா ஹபீப் யூசாஃப் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் MV Antonia 1 படகில் ஜாம்போங்கா நகர துறைமுகத்திற்குச் செல்லும் வகையில் அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அவர் நேற்று (மார்ச் 1) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நாடுகடத்தப்பட்ட குறித்த குழுவினர் கோத்தா கினாபாலு, சண்டாக்கான் மற்றும் தாவாவ் ஆகிய இடங்களில் உள்ள குடிநுழைவு தடுப்பு முகாம்களில் முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று அவர் கூறினார்.

“அவர்களில் 368 ஆண்கள், 88 பெண்கள் மற்றும் 36 சிறுவர்களும் இருந்தனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here