பழச்சாறுப் போத்தல்களில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்; சரவாக் போலீசாரால் முறியடிப்பு

போதைப்பொருள் கடத்துவது போலீஸ் அதிகாரிகளால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, பழச்சாறு போத்தல்களில் அவற்றை நிரப்பி, விநியோகம் செய்துவந்த ஒரு கும்பலில் தந்திரம் போலீசாரால் முறியடிக்கப்பட்டது.

திங்கள் (பிப். 27) முதல் புதன்கிழமை (மார்ச் 1) வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட Ops Tapis Khas என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், இந்த கும்பலின் தந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாக சரவாக் காவல்துறை ஆணையர், டத்தோ முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி தெரிவித்தார்.

“ஆரம்ப கட்ட விசாரணையின்படி, போதைப்பொருள் அடங்கிய பழச்சாறுப் போத்தல்கள் தீபகற்ப மலேசியாவில் இருந்து கூச்சிங்கிற்கு கூரியர் மூலம் அனுப்பப்பட்டுவதாகவும், அதில் பப்பாளி, மாம்பழம் மற்றும் பல சாறுகள் இருப்பதாகத் அவை தோற்றமளிப்பதாகவும்,” இன்று மாநில போலீஸ் தலைமையகத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

சரவாக் காவல்துறையின் இந்த நடவடிக்கை 164 சோதனைகள் மற்றும் 304 ஆய்வுகளை உள்ளடக்கியது என்றும், இதில் 17 முதல் 63 வயதுக்குட்பட்ட 268 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் , RM277,060.10 மதிப்புள்ள பல்வேறு போதைப்பொருட்களைக் கைப்பற்றியதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here