அன்பு சகோதரிகள் அனைவருக்கும் மக்கள் ஓசையின் மகளிர் தின வாழ்த்துக்கள்

இன்று அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் தாயாய், சகோதரியாய், மனைவியாய், சிறந்த தோழியாய் என பல வழிகளில் பல துறைகளில் சிறந்து விளங்கும் அனைத்து சகோதரிகளுக்கும் மக்கள் ஓசை தனது இனிய இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் அனைத்துல மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது. மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகளும் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here