காஜாங் 2 ரயில் நிலையம் வரும் திங்கட்கிழமை (மார்ச் 13) முதல் செயற்படத் தொடங்கும் என்று ரயில்வே சொத்துகள் கழகம் (RAC) தெரிவித்துள்ளது.\
இது வேலை நாட்களில் 46 ரயில்களையும், வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் 33 ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும், காஜாங் 2 நிலையத்திலிருந்து Kl சென்ட்ரலுக்கு முதல் ரயில் சேவை காலை 6.15 மணிக்கும், KL சென்ட்ரலில் இருந்து காஜாங் 2 வரையிலான கடைசி ரயில் வேலை நாட்களில் இரவு 10.45 மணிக்கும் இயக்கப்படும் என்று, RAC இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில், காஜாங் 2 ரயில் நிலையத்திலிருந்து காலை 7.11 மணிக்கும், KL சென்ட்ரலில் இருந்து கடைசி ரயில் இரவு 10.43 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படும்.
அத்தோடு பரபரப்பான நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற வகையிலும், நெரிசல் இல்லாத நேரங்களில் 60 நிமிடங்களும் ஒரு ரயில் என்ற வகையிலும் ரயில்கள் இயக்கப்படும் என்று அது மேலும் கூறியுள்ளது.
“இது காஜாங் மற்றும் பாங்கியில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பொது போக்குவரத்தை அனுபவிப்பதற்கான ஒரு தேர்வை வழங்கும்,” என்றும், இந்த ரயில் சேவை Komuter Link அல்லது Touch ‘n Go கார்டை பணம் செலுத்தும் முறையாக பயன்படுத்த ஊக்குவிக்கிறது என்று RAC தெரிவித்துள்ளது.