ராட்ஸி ஜிடின் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கிறார்- நீதிமன்றம் தீர்ப்பு

தொகுதியில் வாக்காளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய பெர்சத்து தலைவரின் விண்ணப்பத்தை தேர்தல் நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து, பெரிகாத்தன் நேஷனலின் ராட்ஸி ஜிடின் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார்.

ராட்ஸியின் பூர்வாங்க ஆட்சேபனையை அனுமதித்த நீதிபதி ஃபைசா ஜமாலுடின், அஹ்மத் பைசல் அப்துல் கரீமின் தேர்தல் மனுவில் ஆதாரம் இல்லை. குறிப்பாக ராட்ஸி தொகுதியை வெல்வதற்கு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்றார். ராட்ஸி 15ஆவது பொதுத் தேர்தலில் (GE15) 2,310 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here