பெர்சாத்து இளைஞர் பிரிவு தலைவர் பதவியை வான் அஹ்மட் ஃபைசல் தற்காக்கவில்லை

வரவிருக்கும் பெர்சாத்து கட்சித் தேர்தலில், பெர்சாத்து இளைஞர் பிரிவு (Armada) தலைவர்வான் அஹ்மட் ஃபைசல் வான் அகமட் கமால் தனது பதவியை பாதுகாக்க மாட்டார், மாறாக பெர்சாத்து உச்ச மன்ற உறுப்பினர் மட்டத்தில் பதவிக்கு போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Armada விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பெர்சாத்து இளைஞர் உறுப்பினர்களுக்கான அதிகபட்ச வயது எல்லையான 35 வயதை அவர் கடந்துள்ளார் என்பதை கணக்கில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாச்சாங் நாடாளு மன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

“இந்த ஆண்டு எனக்கு 36 வயது பூர்த்தியாகும் என்பதால், அர்மடா உறுப்பினருக்கான வயது வரம்பை நான் தாண்டிவிட்டேன், “நான் மேல்நோக்கி வளர்கிறேன். நான் இன்று என்ன பதவிக்கு போட்டியிடப் போகிறேன் என அறிவிக்க மாட்டேன், ஆனால் நான் உச்ச மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவேன்,” என்று 2022 ஆண்டு பொதுச் சபையுடன் இணைந்து நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த ஆண்டு நவம்பரில் பெர்சாத்து கட்சியின் மத்தியக் குழுத் தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபரில் பிராந்திய அளவிலான தேர்தல்களும், ஜூலையில் கிளைகளுக்கான தேர்தல்களும் நடைபெறும் என அறியமுடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here