கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூவர் கைது

ஜித்ரா அருகே உள்ள டோக் கேசோப்பில் கடந்த வியாழக்கிழமை ஒரு வீட்டில் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியதாக நம்பப்படும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

19 முதல் 25 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் கெடா குற்றப் புலனாய்வுப் பிரிவின், குபாங் பாசு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) சிறப்பு புலனாய்வு உதவியுடன், கைது செய்யப்பட்டதாக குபாங் பாசு மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் Chien Chung Tsaur தெரிவித்தார்.

குறித்த மூவரும் பிற்பகல் 1 மணி முதல் 5 மணி வரை, அலோர் ஸ்டார் பகுதியில் தனித்தனியாக கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“விசாரணையின் முடிவில் அனைத்து சந்தேக நபர்களும் குற்றம் தொடர்பான முந்தைய பதிவுகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த வியாழன் நடந்த சம்பவத்தில், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி, 2,200 ரிங்கிட் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த CCTV கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கண்டறியப்பட்டது.

“விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் மூரும் இன்று தொடங்கி மார்ச் 18 வரை ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here