ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 60,000 அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்கியது தைவான்

ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான, வெள்ள நிவாரணத்திற்காக 60,000 அமெரிக்க டாலர்களை மலேசியாவிற்கான தைவான் தூதர் ஃபோப் யே, மார்ச் 12 ம் தேதி அன்று வழங்கினார்.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கல்களை தெரிவித்த யே, தைவான் அரசாங்கத்தையும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மலேசியாவில் உள்ள தைவானில் அரச சார்பற்ற நிறுவனத்தின் கிளைகளான Tzu Chi மற்றும் Fo Guan Shan போன்றவற்றுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த உதவி மலேசியா மற்றும் தைவான் இடையேயான நட்பை வலுப்படுத்தும் என்றும், இதை உறுதி செய்யும் முகமாக மலேசிய அரசு மற்றும் தனியார் துறைகளுடன் தொடர்ந்து நெருக்கமாக தாம் பணியாற்றுவதாக அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here