இஸ்லாமியர்களின் புனித நோன்பு மாதமான ரமலான் தொடங்குவதற்கான பிறை பார்க்கும் செயல்முறை வரும் புதன்கிழமை, மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் என்று அரசு முத்திரை காப்பாளர் அலுவலகம் இன்று (மார்ச் 15) அறிவித்துள்ளது.
பிறை கண்டவுடன் ரமலான் நோன்பு தொடங்குவதற்கான தேதி மற்றும் நேரம் தொடர்பில், அரசு முத்திரையின் காப்பாளர் அன்றிரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் குறித்த தேதியை அறிவிப்பார் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த பிறை பார்க்குக்கு குழுக்கள் மார்ச் 22 அன்று மாலை நாடு முழுவதும் 29 இடங்களில் பிறையைப் பார்க்க முயற்சிக்கும் என்றும் அது கூறியது.