சிரம்பானிலுள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையின் மருந்தகப் பிரிவில் நேற்று வியாழக்கிழமை (மார்ச் 16) தீ விபத்து ஏற்பட்டதை நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 4.05 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைக்க மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் ரவாங்
ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் விரைந்து செயல்பட்டனர் என்று, மாநில சுகாதார இயக்குனர், டத்தோ டாக்டர் ஹர்லினா அப்துல் ரஷித் கூறினார்.
“தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு குறுகிய நேரத்தில் வெற்றிகரமாக தீயை அணைத்தது என்றும், மேலும் இந்தச் சம்பவத்தின் போது ஊழியர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீவிபத்துக்கான காரணத்தை கண்டறிய இன்னும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.