அம்னோ தேர்தல் முடிவுகள் மார்ச் 18 இரவு அறிவிக்கப்படலாம் -அஹ்மட் மஸ்லான்

அம்னோ உச்ச மன்ற தேர்தல் முடிவுகள் இன்று சனிக்கிழமை (மார்ச் 18) இரவு தெரியவரும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

“இன்று இரவில் முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் அதிக பிரதிநிதிகள் இல்லாத சிறிய பிரிவுகளின் முடிவுகள் பிற்பகலில் வரலாம். பொந்தியானைப் பொறுத்தவரை, பிரதிநிதிகளின் எண்ணிக்கை 690 ஆக அதிகமாக உள்ளது, எனவே இத்தொகுதி முடிவடைய சிறிது நேரம் ஆகலாம்,” என்று அவர் கூறினார்.

இன்று சனிக்கிழமை டேவான் ஜூப்லி இன்டான் சுல்தான் இப்ராஹிமில் நடந்த அம்னோ பிரிவின் தேர்தலில் வாக்களித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசியபோது பொந்தியான் அம்னோ பிரிவின் துணைத் தலைவரான அஹ்மட் மஸ்லான் இவ்வாறு கூறினார்.

நாடு முழுவதும் உள்ள 191 பிரிவுகளில் 189 பிரிவுகளுக்கு இன்று சனிக்கிழமை கட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here