ஜொகூரில் வெள்ள நிலைமை முன்னேற்றம் கண்டு வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, பத்து பகாட் மற்றும் சிகாமாட்டில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
நேற்றிரவு நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 19,041 பேராக இருந்த நிலையில், இன்று காலை 17,125 பேராக குறைந்துள்ளது.
அவர்கள் அனைவரும் அங்குள்ள மொத்தம் 70 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.