216வது போலீஸ் தினத்தை முன்னிட்டு மார்ச் இறுதி வரை போக்குவரத்து சம்மன்களுக்கு 60 விழுக்காடு வரை தள்ளுபடி

216வது போலீஸ் தின கொண்டாட்டத்துடன் இணைந்து, இன்று திங்கட்கிழமை (மார்ச் 20) முதல் இம்மாத மாத இறுதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து சம்மன்களுக்கு காவல்துறை 60 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்குகிறது.

குறித்த அறிவிப்புத் தொடர்பில், கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் முகநூல் பக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் தலைமையகம் மற்றும் போலீஸ் நிலையங்கலிலுள்ள அனைத்து போக்குவரத்து முகப்புகளுக்கு நேரில் சென்று கட்டணம் செலுத்தினாலோ அல்லது MyBayar Saman செயலி மூலம் கட்டணம் செலுத்தினாலோ இந்த சலுகை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here