6 இலட்சம் ரிங்கிட்டுக்கு ‘டத்தோஸ்ரீ’ பட்டங்களை விற்பனை செய்த இருவர் கைது

சிலாங்கூர் அரண்மனையால் வழங்கப்பட்டதாக கூறப்படும் ‘டத்தோஸ்ரீ’ என்ற பட்டத்தை விற்பனை செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை சிலாங்கூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

‘டத்தோஸ்ரீ’ பட்டத்தை வாங்க எண்ணிய பாதிக்கப்பட்டவர், கடந்த பெப்ரவரியில் தான் RM140,000 இழந்ததாக செய்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து இரண்டு ஆண் குடிமக்களும் மார்ச் 15 மற்றும் 17 தேதிகளில் மலாக்கா மற்றும் சிலாங்கூரில் மேற்கொண்ட இரண்டு தொடர் சோதனைகளில் கைது செய்யப்பட்டனர் என்று, சிலாங்கூர் காவல்துறைத் தலைவர், டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.

Seri Paduka Mahkota Selangor (SPMS) விருதைப் பெறுவதற்காக பாதிக்கப்பட்டவரை RM600,000 செலுத்துமாறு இரண்டு சந்தேக நபர்களும் உத்தரவிட்டதாகவும், இதனை ஏமாற்றுவதற்கான ஒரு வழிமுறையைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் குறித்த விருதைப் பெற RM140,000.00 கட்டம் கட்ட ங்களாக கொடுத்தார். இருப்பினும், பட்டம் பெற்றவர்களின் பட்டியலில் தனது பெயர் இல்லாததைக் கண்டு, பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார். எனவே காவல்துறையில் புகார் செய்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தக் கைதின் விளைவாக, போலியானதாகக் கருதப்படும் கடிதங்கள் மற்றும் இரண்டு சந்தேகநபர்கள் மோசடிச் செயலில் பயன்படுத்திய சில கையடக்கத் தொலைபேசிகளையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் மேலும் கூறினார்.

மோசடிக் குற்றத்திற்காக சிலாங்கூர் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) மூலம் இரண்டு சந்தேக நபர்களும் தண்டனைச் சட்டத்தின் (KK) பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

“அரண்மனையிலிருந்து பட்டங்கள் யாருக்கும் விற்பனை செய்யப்படாது என்றும், இந்த குற்றச் செயல் இஸ்தானா சிலாங்கூரின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் காவல்துறைக்கு அரண்மனையிலிருந்து பதிலளிக்கப்பட்டது என்றார்.

அரண்மனையின் பெயரைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடும் தனிநபரோ அல்லது குழுவோ இருந்தால், குற்றம் செய்பவர்கள் மீது சமரசம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வலியுறுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here