560 கிலோ கெத்தும் இலைகளை எடுத்துச் சென்ற நபர் கைது

ஜெலி:  கம்போங் பாசீர் டுசுனில் சாலையில் தனது காரில் 560 கிலோகிராம் (கிலோ) கெத்தும் இலைகளை எடுத்துச் சென்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். சந்தேக நபரின்  Proton Preve  காரை 15 கிலோமீட்டர்கள் துரத்திச் செல்ல வேண்டிய நிலை போலீஸ் அதிகாரிகளுக்கு ஏற்படுதத்தை  அடுத்து, காலை 10.30 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக ஜெலி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷாரி யாக்கோப் தெரிவித்தார்.

முன்னதாக, சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் ஓட்டியதற்காக சந்தேகத்திற்குரிய ஒரு வேலையில்லாதவர் கைது செய்யப்பட்டார். Ops Tapis நடத்திக்கொண்டிருந்த போலீசார்சந்தேக நபரை சாலையோரம் நிறுத்துமாறு உத்தரவிட்டனர். ஆனால் அதற்கு பதிலாக அந்த இளைஞன் தனது வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்தியதாக அவர் இன்று ஜெலி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் ஒரு ஊடக சந்திப்பில் கூறினார்.

போலீசார் பின்தொடர்ந்த பிறகு, அந்த நபர் காரில் இருந்து இறங்கி ஓடினார். ஆனால் காவல்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார் என்று சாரி கூறினார். காரை சோதனை செய்ததில், RM5,680 மதிப்புள்ள 560 கிலோ எடையுள்ள 56 கறுப்பு பிளாஸ்டிக் பைகள் கெததும் இலைகளை போலீசார் கண்டுபிடித்தனர்.

இலைகள் தவிர, 1,000 மில்லிலிட்டர் (மிலி) கெத்தும் தண்ணீர் மற்றும் 100 மில்லி இருமல் சிரப் ஆகியவற்றையும் போலீசார் மீட்டனர் என்று அவர் கூறினார். தானா மேரா சந்தைக்காக கெடாவில் உள்ள சிக் பகுதியில் கெத்தும் இலைகளை எடுத்துச் சென்றது உட்பட சந்தேக நபரிடம் இரண்டு கடந்தகால பதிவுகள் இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார். சந்தேக நபரும் மெத்தாம்பேட்டமைன் உட்கொண்டிருந்தது சோதனையில் தெரிய வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here