Face book நேரலையால் மூண்ட சண்டை! போலீசார் தீவிர விசாரணை

பெட்டாலிங் ஜெயா, 

கோலாலம்பூர், புடுவில் உள்ள ஒரு கடைக்கு வெளியே இன்று நள்ளிரவுக்குப் பின்னர் ஏற்பட்ட சண்டை தொடர்பில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சமூக ஆர்வலர் ஒருவர் முகநூல் நேரலையின்போது ஆடவர் ஒருவரை அவரது அனுமதியின்றி காணொளி பதிவு செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இக்கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

44 வயதுடைய சம்பந்தப்பட்ட ஆடவர் இன்று அதிகாலை 2.52 மணியளவில் போலீஸ் புகார் செய்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் அஸ்வான் அமின் நோர்டின் தெரிவித்தார்.

புகாரின்படி, சம்பந்தப்பட்ட சமூக ஆர்வலர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அவருடன் இருந்த ஒருவர் புகார்தாரரைத் தள்ளிவிட்டு விலா எலும்புப் பகுதியில் குத்தியதாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தலையிட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட சமூக ஆர்வலரும் தனியாக போலீஸ் புகார் செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கலவரத்தில் ஈடுபட்டதற்கான குற்றவியல் சட்டத்தின் 147ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகமட் அஸ்வான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here