ஹரிராயாவை முன்னிட்டு 30 பொருட்களுக்கு விலை கட்டுப்பாடு

 ஹரிராயா கொண்டாட்டம் முழுவதும் பண்டிகைக் கால அதிகபட்ச விலைத் திட்டத்தை (SHMMP) செயல்படுத்துவதன் கீழ் மொத்தம் 30 பொருட்களின் விலைகளை கட்டுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப், இந்த விவகாரம் அனைத்து தொழில்துறையினருடன், குறிப்பாக மூலப்பொருட்கள், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரிவாக விவாதிக்கப்படும் என்றார்.

SHMPP செயல்படுத்தும் காலம் ஹரி ராயாவிற்கு ஏழு நாட்களுக்கு முன்பும், ராயாவின் இரண்டு நாட்கள் மற்றும் அதன்பின் ஏழு நாட்களுக்கு இந்த விலை கட்டுப்பாடு இருக்கும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) 2023 சீனப் புத்தாண்டுக்கான SHMMPயை ஜனவரி 15-29 வரை செயல்படுத்துவதற்காக மொத்தம் எட்டு வகையான பொருட்களுக்கு விலை கட்டுப்பாட்டை  வெளியிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here