மூவாரிலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 சிறுவர்கள் பலி..!

மூவார் கம்போங் சபாக் அவோரில் உள்ள ஒரு வீட்டில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து இரவு 7.49 மணிக்கு தமக்கு அழைப்பு வந்ததாக, மூவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், ஷாஹ்ரிசல் மொக்தார் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, குறித்த வீடு சுமார் 80 சதவீதம் தீயில் அழிந்திருந்தது.

“குறித்த வீட்டில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பின்னர், 4 மற்றும் 6 வயதுடைய இரண்டு சிறுமிகள் ; மற்றும் 8 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுவர்கள் – குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இருந்த மருத்துவக் குழுவால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஷாரிசல் கூறினார்.

“சம்பவத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here