நோன்புப்பெருநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து உள்நாட்டு விமான சேவைகள் அதிகாரிப்பு

நோன்புப்பெருநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து சபா மற்றும் சரவாக் ஆகிய வழித்தடங்கள் உட்பட, உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

மலேசிய ஏர்லைன்ஸ் உட்பட பல கூடுதல் விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த சிறப்பு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அவை தேவைக்கு ஏற்ப பெரிய விமானங்களைப் பயன்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விமானங்கள் அதிகரிப்பதற்கான ஒப்புதல் குறித்து, மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் போக்குவரத்து அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தது என்று கூறினார்.

மேலும் “இவ்வாறு அதிக விமானங்கள் சேவையில் ஈடுபடுவதால், நிசசயமாக விமான டிக்கெட்டுக்களின் விலை சராசரி விலையையும் விட குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று லோக் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here