இன்று சித்திரைப் புத்தாண்டு மற்றும் வைசாகியைக் கொண்டாடும் தமிழர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ் மற்றும் சீக்கிய சமூகத்தினருக்கும் இந்த பண்டிகைகள் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவரும் என்று அவர்கள் வாழ்த்து தெரிவித்ததாக, இஸ்தானா நெகாராவின் ஃபேஸ்புக்கில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) வெளியிட்டுள்ள ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.