தொலைபேசியைத் திருடிவிட்டு தப்பியோடியபோது கார் திடீரென தீப்பிடித்ததில், கையும் களவுமாக மாட்டிய ஆடவர்..!

தும்பாட்டின் வாகாஃப் பாரு அருகே போஹோன் தஞ்சோங்கில் உள்ள பாசீர் பெக்கான் தெங்காவில் உள்ள ஒரு மளிகைக் கடை ஊழியரின் தொலைபேசியைத்த் திருடிவிட்டு தப்பியோடியபோது, அவர் ஓட்டிச் சென்ற கார் நேற்றிரவு தீப்பிடித்து எரிந்ததில், ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இரவு 11.09 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 36 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, அவர்கள் பயணித்த Proton Saga BLM கார் வீதிச் சுவரில் மோதியது, ஆனால் அவரது நண்பர் தப்பிச் சென்றுள்ளதாக, துமபாட் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், கண்காணிப்பாளர் டான் செங் லீ கூறினார்.

சந்தேக நபர் மளிகைக் கடைக்கு வந்து ஐஸ் வாங்குவது போல் நடித்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அப்போது மளிகைக்கடை ஊழியர் குளிர்சாதன பெட்டியில் இருந்து ஐஸ்ஸை எடுத்தார், ஆனால் சந்தேக நபர் பணம் செலுத்தும் கவுண்டரில் இருந்த ஊழியரின் தொலைபேசியை எடுத்டுக்கொண்டு ஓடிவிட்டார் என்றார்.

“சம்பவத்தைப் பற்றி அறிந்த பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் திருடிக்கொண்டு தப்பித்ததாக கூறப்படும் காரைத் துரத்திச் சென்றபோது, கார் சறுக்கி கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்து.

“சந்தேக நபர்களில் ஒருவர் தனது நண்பர் கைது செய்யப்பட்டபோது காரில் இருந்து தப்பினார். கைது செய்யப்பட்டவரின் சிறுநீர் பரிசோதனையில் அவருக்கு மெத்தாம்பேட்டமைன் இருப்பது கண்டறியப்பட்டது, என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபரிடம் போதைப்பொருள், திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளை தொடர்பான 12 முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன என்று செங் லீ கூறினார்.

அமிர் குடான் எனப்படும் மற்றொரு சந்தேக நபரை போலீசார் தேடி வருவதாகவும், சந்தேக நபரை அறிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தை அல்லது சார்ஜென்ட் முகமட் ஹஸ்னிஸான் இஸ்மாயில்என்பவரை 011-3167 13373 என்றார் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here