தொழிலாளர்களின் தியாகங்கள் மற்றும் பங்களிப்புகள் பாராட்டப்பட வேண்டியவை; வீ கா சியோங்

ஒவ்வொரு தொழிலாளியும் முக்கியமானவர்கள். அவர்களின் தியாகங்கள் பாராட்டப்பட வேண்டும் என்று திங்கள்கிழமை (மே 1) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு MCA தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறுகிறார்.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) மாலை தனது முகநூல் பக்கத்தில் அனைத்து மலேசியத் தொழிலாளர்களுக்கும் “தொழிலாளர் தின வாழ்த்துக்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

நமது நாட்டின் வளர்ச்சியில் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் தியாகங்கள் மற்றும் பங்களிப்புகள் அர்த்தமுள்ளவை மற்றும் பாராட்டப்பட வேண்டியவை. அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2023 தொழிலாளர் தின வாழ்த்துகள் என ஆயர் ஹித்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here