மலாக்காவிலுள்ள மரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையில் இரு தீயணைப்பு வீரர்கள் காயம்

புக்கிட் ராம்பாய் தொழிற்பேட்டையில் உள்ள மரம் அரியும் ஆலையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் இருவர் காயமடைந்தனர்.

தாங்கா பத்து, தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் ஆபரேஷன்ஸ் கமாண்டர், துணை தீயணைப்புத் தலைவர் முகமட் ஃபாசில் யூசப் கூருக்கையில், தீ அணைக்கும் நடவடிக்கையின் போது கண்ணாடி வெடித்து பறந்து தாக்கியதில் தீயணைப்பு அதிகாரி முகமதட் அரிஃப் அக்மல் சுல்கிஃப்லியின் வலது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.

“மற்றொரு உறுப்பினர் மீது கூரை இடிந்து விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர்கள் பயன்படுத்திய தற்காப்பு ஆடைகள் காரணமாக அவை ஒரு பெரிய விபத்து ஏற்படுவதைத் தடுத்தன,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

குறித்த மரம் அரியும் ஆலையில் டி ஏற்பட்டதாக இன்று காலை 11.20 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், மூன்று தீயணைப்பு மீட்பு டெண்டர்கள் (FRT) மற்றும் இரண்டு தண்ணீர் டேங்கர்களுடன் 25 உறுப்பினர்கள் இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் விளக்கினார்.

“இன்று மதியம் 2 மணியளவில் தீயைக் கட்டுப்படுத்த முடிந்தது, மேலும் தீ விபத்து நடந்த தொழிற்சாலை ஊழியர்களுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here